search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பத் தகராறு"

    பாபநாசம் அருகே குடும்பத்தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் மனைவி எலிசபெத்ராணி (வயது 51). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் எலிசபெத் ராணியின் அண்ணன் மைக்கேல் தாசுக்கும், எலிசபெத் ராணி குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 7-ந் தேதி மைக்கேல்தாஸ், அவருடைய மனைவி ஜெயமேரி, மகன் பவுல்ராஜ், மகள்கள் ஜாய்ஸ்மேரி, கில்ட்டா மேரி ஆகிய 5 பேரும் எலிசபெத்ராணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த எலிசபெத்ராணி கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதுகுறித்து எலிச பெத்ராணியின் மகன் செல்வமணி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், உமாபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து மைக்கேல்தாஸ், ஜெயமேரி, பவுல்ராஜ், ஜாய்ஸ்மேரி ஆகிய 4 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராஜசேகர் அவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைமறைவான கில்ட்டா மேரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குடும்பத்தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகா புரியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக பெரியநாயகி (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி சேகர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெரியநாயகி தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடப்பதாக பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெரிய நாயகியை சேகர் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. சேகரை கைது செய்த போலீசார், பெரியநாயகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்பத் தகராறில் வாலிபரை வெட்டிய தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர், ஜூன்.13-

    மதுரை மாவட்டம், பேரையூர் கிருஷ்ணகோனார் லைன் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). இவரது தங்கையின் கணவர் புண்ணியமூர்த்தி. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார்.

    இது குறித்து மாரியப்பன் புண்ணியமூர்த்தியிடம் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புண்ணியமூர்த்தி, அவரது மனைவியின் சகோதரர் மாரியப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் இன்று குடும்பத் தகராறில் தாயை சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கும் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்துக்குட்பட்ட கார்வாரா கிராமசபை தலைவியாக முன்னர் பொறுப்பு வகித்தவர் ஷிக்சா தேவி. இவருக்கும் இவரது மகன் யோகேஷ் குமார்(22) என்பவருக்கும் குடும்ப விவகாரம் தொடர்பாக இன்று வாய் தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றி கடுமையான வாக்குவாதமாக திசை மாறியதால் ஆத்திரம் அடைந்த யோகேஷ் குமார், பெற்றதாய் என்றும் கருதாமல் ஷிக்சா தேவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டிட்டாவி காவல் நிலையை போலீசார், பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் மகனை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    ×